Loading...

புதன், 25 ஜனவரி, 2012

பஹ்ரைனில் விஷவாயு தாக்கிய 4 இந்தியர்கள் பலி-ஒருவர் கவலைக்கிடம்

பஹ்ரைனில் பணிபுரிந்து வந்த 4 இந்தியர்கள் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஹ்ரைனில் உள்ள ஹமாத் நகரில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த 5 பேர் ஒரே அறையில் தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக பஹ்ரைனில் கடும் குளிர் நிலவுகின்றது. இதனால் அறையில் குளிரை போக்கும் வகையில், 5 பேரும் நேற்று முன்தினம் இரவு தூங்க செல்லும் முன், பெயிண்ட் டிரம் ஒன்றில் சில மரக்கட்டைகளை போட்டு தீ மூட்டினர்.

அதன்பிறகு 5 பேரும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நேற்று காலையில் 5 பேரும் பணிக்கு செல்லவில்லை. இதில் சந்தேகமடைந்த மற்ற பணியாளர்கள், 5 பேரும் தங்கி இருந்த அறைக்கு வந்து பார்த்தனர். அப்போது அறையில் 5 பேரும் மயங்கிக் கிடந்தனர். இதையடுத்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவ பரிசோதனையில் சுரேஷ் பாபு (45), பிரியேஷ்(27), நகுலன்(48), லாலு தைதலா (37) ஆகிய 4 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த சுனில் சசிதரன் (53) என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 4 பேரும் அறையில் கார்பன் மேனாக்சைடு வாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக பரிசோதனையில் தெரிய வந்தது.

கடையநல்லூரை சேர்ந்த அவுச்சாரி ரஹ்மத்துல்லாஹ் ஜித்தாவில் மரணம்.


கடையநல்லூர் அல்லிமூப்பன் தெரு அவுச்சாரி நாகூர் மிரான் அவர்களின் மகன் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் 23.01.2012(இரவு) திங்கள் கிழமை அன்று சவூதி அரேபிய ஜித்தாவில் உடல் நல குறைவின் காரணமாக வபாதாகி விட்டார்கள் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடையே ஆழ்ந்த இரங்கலை தெரிய படுத்துகி
றோம்.

டேம் 999 சோஹன் ராயின் ஆஸ்கர் கனவு பொய்த்துவிட்டது.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து சென்ற சோஹன் ராயின் டேம் 999 படம் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை.

முல்லைப் பெரியாறு அணை குறித்து தேவையில்லாமல் பீதியைக் கிளப்பும் வகையி்ல எடுக்கப்பட்ட படம்தான் இந்த டேம் 999. கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர் வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் ஆதரவோடு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.

84வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் டேம் 999 படமும் கலந்து கொண்டது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாமுயல் கோல்டுவின் தியேட்டரில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் டேம் 999 இல்லை.

முல்லைப் பெரியாறு அணை உடைந்து பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவது போன்று எடுக்கப்பட்ட படம் டேம் 999. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டேம் 999 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிறந்த படம், பாடல்கள் மற்றும் ஒரிஜினல் இசை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆயினும் இறுதிப் பட்டியலில் இடம்பெறத் தவறியுள்ளதால் சோஹன் ராயின் ஆஸ்கர் கனவு பொய்த்துவிட்டது.

தி ஆர்டிஸ்ட், தி டிசென்டன்ட்ஸ், தி ஹெல்ப், ஹ்யூகோ, மணிபால் உள்ளிட்ட படங்கள் தான் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடக் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கின்றது.

இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

நிலநடுக்கம் ஏற்படும், முல்லைப் பெரியாறு உடையும் என்று கேரளக்காரர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த டேம் 999 'ஆஸ்கர் நிலநடுக்கத்தில்' சிக்கி உடைந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடையநல்லூர் அருகே பரபரப்பு போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டதால் தேரை நடுரோட்டில் நிறுத்தி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்:

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் முப்புடாதி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் நேற்று(23-ந்தேதி)மதியம் 2மணிக்கு நடந்தது. தேர் முக்கிய வீதிகளின் வழியாகவந்து தென்காசி-மதுரை மெயின் ரோட்டிற்கு வந்தடைந்தது. 





வழக்கமாக தேரை மெயின் ரோட்டில் நிறுத்தி தேங்காய் உடைப்பது வழக்கம். அதேபோல் தேங்காய் உடைப்பதற்காக மெயின் ரோட்டில் தேர் நிறுத்தப்பட்டது. 

ஆனால் மெயின்ரோட்டில் தேரை நிறுத்தி தேங்காய் உடைக்கக்கூடாது என்று போலீசார் கூறினர். ஆனால் பொதுமக்களோ, கடந்த 50ஆண்டுகளாக தென்காசி- மதுரை மெயின்ரோட்டில் தேர் நிறுத்தப்பட்டு தேங்காய் உடைத்து வருகிறோம். அந்த நடைமுறையை மாற்ற முயற்சிக்கக்கூடாது என்று கூறினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து தேரோட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் தென்காசி-மதுரை மெயின் ரோட்டிலேயே தேரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். 

இந்நிலையில் தேரோட்டத்தில் சிலம்பாட்டம் ஆடிய வாலிபர்களை போலீசார் தடுத்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்ற வாலிபரை போலீசார் பிடித்துச்சென்றனர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் தென்காசி தாசில்தார் ராசையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்டோர் கிருஷ்ணாபுரம் பகுதி சமுதாயத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் பிடித்துச் சென்ற வாலிபரை விடுவிக்க வேண்டும் என்று கூறினர். 

அதன்பேரில் பிடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. 

தேர் இரவு 7 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது. நடுரோட்டில் தேரை நிறுத்தி பொதுமக்கள் நடத்திய இந்த மறியல் போராட்டத்தால் தென்காசி-மதுரை மெயின் ரோட்டில் இருபுறமும் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

மறியல் போராட்டம் முடிந்து தேர் நிலைக்கு சென்றபிறகே அவ்வழியாக வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதனால் தென்காசி-மதுரை மெயின்ரோட்டில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புளியங்குடி அருகே அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம கும்பலுக்கு வலை


நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை வழியாக ஆலங்குளத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ் சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னைவனம் வந்த போது, ஒரு மர்ம கும்பல் பஸ் மீது கல்வீசி தாக்கி விட்டு, ஒரு பெட்ரோல் குண்டையும் பஸ் மீது வீசியது.
 

இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. பெட்ரோல் குண்டு பஸ்சில் விழுந்து எரிந்ததில் பஸ்சின் இருக்கைகள் தீப்பிடித்தது. உடனடியாக பஸ்சின் டிரைவர் சரவணன், கண்டக்டர் செல்வமணி மற்றும் பயணிகள் தீயை அணைத்தனர். பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. 
 
உடனடியாக சம்பவ இடத்துக்கு எஸ்.பி.விஜயேந்திர பிதரி, டி.எஸ்.பி. ஜமீம் மற்றும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
 
அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பசுபதிபாண்டியன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பசுபதிபாண்டியன் ஆதரவாளர்கள் யாரேனும் உள்ளனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு நெல்லை புறநகர் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலையும் புறநகர் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை 7 மணிக்கு பிறகே அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம் போல் பஸ்கள் புறப்பட்டு சென்றன

திங்கள், 23 ஜனவரி, 2012

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 18 சதவீதம் கூடுதல் மழை சாகுபடி பணிகள் விறுவிறுப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 18 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளில் தற்போது 66 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நெல¢லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டு தோறும் கார், பிசானம் ஆகிய இரு போக நெல் சாகுபடி இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கடந்த 2ஆண்டுகளாக  போதிய தண்ணீர் இல்லாமல்  கார் சாகுபடி கானல் நீராகி விட்டது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 20 அடியை தொட்டதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரலாறு காணாத வறட்சியை சந்தித்தன.
எனினும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் பெருகியது. சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட மற்ற அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்ததுடன் அணைகள், குளங்களும் பெருகின.
நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 485.80 மிமீ மழை கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டு இதையும் தாண்டி 662.30 மிமீ மழை கிடைத்துள்ளது. இதே போல ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டு சராசரி மழையளவான 814.80 மில்லி மீட்டரை விட அதிகமாக 965.07 மிமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 18 சதவீதம் கூடுதலாகும்.
இதன் மூலம் கடந்த ஆண்டை விட அணைகளில் கூடுதல் தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளிலும் 66 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 59 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருந்தது.
குளங்களை பொறுத்தவரை நெல்லை மாவட்டத்தில் 921 கால்வரத்து குளங்களும்¢, 1,528 மானாவாரி குளங்களுமாக மொத்தம் 2 ஆயிரத்து 449 குளங்கள் உள்ளன. இதில் 12 குளங்களில் 3 மாதங்களுக்கு தேவையான தண்ணீரும், 608 குளங்களில் இரண்டு மாதங்களுக்கு தேவையான தண்ணீரும், 1,829 குளங்கள¤ல் ஒரு மாதத்திற்கு தேவையான தண்ணீரும் இருப்பு உள்ளது.
அணைகள், குளங்களில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
பிசான பருவத்திற்கு 66 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் நல்ல மகசூல் கிடைக்கும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை அளவு விபரம்- ஒரு ஒப்பீடு
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வழக்கமான மழையளவும், கடந்த ஆண்டு கிடைத்த மழையளவு விவரமும் (மில்லி மீட்டரில்) வருமாறு:
மாதம்    வழக்கமான    கடந்த ஆண்டு
    மழை அளவு            பெய்தது
அக்டோபர்    166.0    299.61
நவம்பர்    208.20                 283.35
டிசம்பர்             111.60                 79.34
மொத்தம்           485.80                 662.30

ம.தி.மு.க., தேர்தல் அலுவலகம் சங்கரன்கோவிலில் திறப்பு

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் நேற்று ம.தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார்.
சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் நேற்று ம.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம் ஏற்றினார். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் நெல்லை மாவட்ட செயலாளர் சரவணன், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் வாணிபிச்சையா, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், சிங்கப்புலிபாண்டியன், சங்கர், தினகரன், வக்கீல்கள் மாதவராம், புஷ்பராஜ், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், நகர மாணவரணி செயலாளர் ஆறுமுகச்சாமி, நகர துணை செயலாளர் ராஜகோபால், சிவசங்கரன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடுநிலைப்பள்ளிகளுக்கு மேலும் 1,267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க ஜெயலலிதா உத்தரவு

சென்னை: தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளுக்காக நடப்பு கல்வியாண்டிலேயே 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குகித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

2009-10ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பட்டதாரி ஆசிரியர் வீதம் 436 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் இந்தக் கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி கற்க ஏற்றவகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான சாய்வு மேஜை, இருக்கை, மேஜை, நாற்காலி ஆகிய வசதிகளை ஏற்படுத்த ரூ.36 கோடியே 17 லட்சத்தை ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 25,284க அதிகரித்துள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் 16,028 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகள் ஆகியவை நடத்தப்பட்டு ஜூன் மாதத்துக்குள் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். 16,000க்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கும் பணி மாவட்ட அளவில் இப்போது நடைபெற்று வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாஃப் செலகஷன் கிரேடு 2 தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 47 பேர் மட்டுமே பங்கேற்பு

நெல்லை: பாளையங்கோட்டையில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் சார்பில் நடந்த அசிஸ்டண்ட் கிரேட் 2 அதிகாரிகளுக்கான எழுத்து தேர்வில் வெறும் 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் ஸ்டாஃப் செலக்ஷன கமிஷன் சார்பில் அசிஸ்டண்ட் கிரேட் 2 அதிகாரிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் இந்தி டைப்பிஸ்ட்களுக்கான தேர்வு பல இடங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு வினாத்தாளிலும் 200 கேள்விகள் இடம் பெற்றன.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகேயுள்ள ஒரு பள்ளியில் இந்த தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் இத்தேர்வுக்காக 257 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 47 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பெரும்பாலான இளைஞர்கள் இந்த தேர்வை எழுத ஆர்வம் காட்டவில்லை.

சனி, 21 ஜனவரி, 2012

நாங்குநேரி அருகே கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள் ரகளை: 15 பேர் மீது வழக்கு


நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சவளைக் காரன்குளம் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளனர். விளையாட்டில் பரப்பாடி அணி வெற்றி பெற்றதும் அவர்கள் குறிப்பிட்ட சில சமுதாய தலைவர் பெயர்களை கூறி கோஷமிட்டு சென்றுள்ளனர்.

இதை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் நாராயணன் (26) என்பவர் தட்டி கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் கள் நாராயணனையும் அவ மரியாதையாக பேசினார் களாம். இதுகுறித்து நாராயணன், விஜய நாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பரப்பாடியை சேர்ந்த மோசஸ் ஜெபவினீத் (22), ஜோசுவா (17), கிப்ட்சன், மேசாக், ஜெயகுமார் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் மோசஸ் ஜெப வினீத் மற்றும் ஜோசுவா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய் தனர். மற்றவர்களை தேடிவருகிறார்கள்.

ஆலங்குளம் அருகே திருமணம்- நிச்சயித்த பெண் கடத்தப்பட்டதால் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து


ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரத்தை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது60). இவரது தம்பி பெரியசாமி (47). இவர்களது சகோதரி மகள் தீபாவை, முத்து பாண்டியன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் பேசி திருமண நிச்சயம் செய்தனர். ஆனால் தீபா பெரியசாமியின் மகனை காதலித்து வந்துள்ளார்.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியசாமியின் மகன் தீபாவை வெளியூர் கடத்தி சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அண்ணன் தம்பிகளான முத்துபாண்டியனுக்கும், பெரியசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி, பெரியசாமியை கத்தியால் குத்தினார். பலத்த காயம் அடைந்த பெரியசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நெல்லை அருகே இளம்பெண் கொலை: 'முறைதவறி உறவு வைத்ததால் கொன்றோம்' கைதான சித்தப்பா பரபரப்பு வாக்குமூலம்


நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 50). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு முத்துக்குமார், கனகமணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பெண் குழந்தை இல்லாததால் மாரியம்மாள் தனது அக்காள் சங்கிலிமாரியம்மாள் மகன் முருகம்மாள் (வயது26) என்பவரை தங்கள் மகளாக பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

முருகம்மாள் தனது தாய் வீடான மேலகுன்னத்தூருக்கு சென்று வந்தாலும் பெரும்பாலான நாட்கள் அழகிய பாண்டியபுரத்தில் சித்திவீட்டிலேயே வசித்து வந்தார். துரைராஜ்- மாரியம்மாளின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

அவர்கள் கேரளாவில் வசித்து வருகிறார்கள். மணிகண்டன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக அழகியபாண்டியபுரம் வந்து செல்வார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும் முருகம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முருகம்மாளுக்கு மணிகண்டன் அண்ணன் முறை ஆவார். திருமணமானவர், அண்ணன் என்றும் பாராமல் மணிகண்டன் மீது முருகம்மாளுக்கு காதல் உண்டானது. இதனிடையே முருகம்மாளுக்கு அவரது பெற்றோரும், சித்தப்பா-சித்தியும் மாப்பிள்ளை பார்த்தனர்.

இதை அறிந்த முருகம்மாள் நான் மணிகண்டனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறினார். இதை அவர்கள் கண்டித்தனர். ஆனால் முருகம்மாள் மணிகண்டனை திருமணம் செய்வதில் விடாப்பிடியாக இருந்தார். நேற்று முருகம்மாளிடம் விசயத்தை பேசி மனதை மாற்ற அவரது தாய்மாமன் மாடசாமி வந்தார். சித்தப்பா துரைராஜ், தம்பி கனகமணி ஆகியோரும் அருகில் இருந்து முருகம்மாளிடம் பேசினர்.

மணிகண்டனை மறந்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்யும்படி கூறினர். அதற்கு முருகம்மாள் பிடிவாதமாக மறுத்தார். இது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் 3 பேரும் முருகம்மாளை அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த முருகம்மாள் அருகில் உள்ள மணிகண்டனின் வீட்டுக்குள் ஓடினார். பின்னால் 3 பேரும் துரத்தியபடி ஓடினார்கள். இதை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பினார். ஆத்திரம் தீராத 3 பேரும் முருகம்மாளை சரமாரியாக வெட்டினர். இதில் முருகம்மாளின் தலை, கழுத்து போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது.

படுகாயம் அடைந்த முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதரி, தாழையூத்து டி.எஸ்.பி.(பொறுப்பு) மதிவாணன், மானூர் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மானூர் போலீசார் முருகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர். மாடசாமி, கனகமணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான துரைராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனக்கு பெண் குழந்தை இல்லாததால் முரும்மாளை என் மகள் போல் பாவித்து வளர்த்து வந்தேன். மேலகுன்னத்தூரில் இருந்து முருகம்மாள் அடிக்கடி இங்கு வருவார்.

கடந்த 6 மாதமாக அவளை எனது வீட்டிலேயே தங்கவைத்து திருமண ஏற்பாடுகள் செய்தேன். ஆனால் அவளோ தனக்கு அண்ணன் முறை கொண்ட மணிகண்டனுடன் தொடர்பு வைத்திருந்தார். இதை பக்குவமாக எடுத்து சொல்லியும் அவள் கேட்கவில்லை. மணிகண்டனைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக கூறினாள். இதனால் எங்கள் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று கருதினோம். பலமுறை எடுத்து சொல்லியும் கேட்காததால் முருகம்மாளை வெட்டி கொலை செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


துபாய் த‌மிழ்ப் பெண்க‌ள் ச‌ங்க‌த்தின் ‘போக‌லாம் பூங்கா‌’ சிற‌ப்பு நிக‌ழ்ச்சி


துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் 2012ம் ஆண்டின் முதல் நிகழ்வாக ” போகலாம் பூங்கா ” என்ற விளையாட்டுநிகழ்ச்சி ஜனவ‌ரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஸ‌ஃபா பார்க்கில் வைத்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தன் பிள்ளைகளின் வருகையினால் மகிழும் தாய் போல இயற்கையும் காலநிலையை இதமாகத் தந்து நம்மீது கனிவு காட்ட ஆஹா வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. சங்கத்தின் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியதோடு அனைவரையும் வரவேற்று, புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.







கடையநல்லூர் புகைப்படம்