Loading...

திங்கள், 23 ஜனவரி, 2012

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 18 சதவீதம் கூடுதல் மழை சாகுபடி பணிகள் விறுவிறுப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 18 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளில் தற்போது 66 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நெல¢லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டு தோறும் கார், பிசானம் ஆகிய இரு போக நெல் சாகுபடி இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கடந்த 2ஆண்டுகளாக  போதிய தண்ணீர் இல்லாமல்  கார் சாகுபடி கானல் நீராகி விட்டது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 20 அடியை தொட்டதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரலாறு காணாத வறட்சியை சந்தித்தன.
எனினும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் பெருகியது. சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட மற்ற அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்ததுடன் அணைகள், குளங்களும் பெருகின.
நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 485.80 மிமீ மழை கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டு இதையும் தாண்டி 662.30 மிமீ மழை கிடைத்துள்ளது. இதே போல ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டு சராசரி மழையளவான 814.80 மில்லி மீட்டரை விட அதிகமாக 965.07 மிமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 18 சதவீதம் கூடுதலாகும்.
இதன் மூலம் கடந்த ஆண்டை விட அணைகளில் கூடுதல் தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளிலும் 66 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 59 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருந்தது.
குளங்களை பொறுத்தவரை நெல்லை மாவட்டத்தில் 921 கால்வரத்து குளங்களும்¢, 1,528 மானாவாரி குளங்களுமாக மொத்தம் 2 ஆயிரத்து 449 குளங்கள் உள்ளன. இதில் 12 குளங்களில் 3 மாதங்களுக்கு தேவையான தண்ணீரும், 608 குளங்களில் இரண்டு மாதங்களுக்கு தேவையான தண்ணீரும், 1,829 குளங்கள¤ல் ஒரு மாதத்திற்கு தேவையான தண்ணீரும் இருப்பு உள்ளது.
அணைகள், குளங்களில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
பிசான பருவத்திற்கு 66 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் நல்ல மகசூல் கிடைக்கும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை அளவு விபரம்- ஒரு ஒப்பீடு
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வழக்கமான மழையளவும், கடந்த ஆண்டு கிடைத்த மழையளவு விவரமும் (மில்லி மீட்டரில்) வருமாறு:
மாதம்    வழக்கமான    கடந்த ஆண்டு
    மழை அளவு            பெய்தது
அக்டோபர்    166.0    299.61
நவம்பர்    208.20                 283.35
டிசம்பர்             111.60                 79.34
மொத்தம்           485.80                 662.30

கருத்துகள் இல்லை: